பாரதியார் படித்த வகுப்பறையில் மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு

நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் படித்த வகுப்பறையில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

Update: 2021-12-11 19:45 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் படித்த வகுப்பறையில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

பாரதியார் பிறந்த நாள்

மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா நேற்று நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளிக்கல்வி சங்க பொருளாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். செயலாளர் செல்லையா வரவேற்று பேசினார்.

நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பாரதியாரின் பெருமையைப் பற்றிப் பேசினார். இதைத்தொடர்ந்து ஏற்கனவே பள்ளியில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி, அங்கு உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உறுதி மொழி ஏற்பு

இதைத்தொடர்ந்து பாரதியார் படித்த வகுப்பறையில் மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்றனர். இந்த உறுதிமொழியை கணபதி சுப்பிரமணியன் வாசித்தார். இந்த 

நிகழ்ச்சியில் மாவட்ட பதிவாளர் கண்ணன், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் மகாதேவன், பள்ளிக்கல்வி சங்க நிர்வாகிகள் திருமலையப்பன், சட்டநாதன் ஆசிரியர்கள் சொக்கலிங்கம், கந்தமுருகன், பாலசுப்பிரமணியன், ராஜலட்சுமி, கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் உலகநாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்