தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை
வள்ளியூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள ஆ.திருமலாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுதன் (வயது 25). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சுதன் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த பெண் காதலை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுதன் விரக்தி அடைந்து வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.