வீட்டில் நகை, பணம் திருடிய 4 பேர் கைது
வீட்டில் நகை, பணம் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
நெல்லை:
பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் ஜோதிபுரத்தை சேர்ந்தவர் அங்கப்ப பாண்டியன் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.
இதையடுத்து மர்ம நபர்கள் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரியை சேர்ந்த சேர்மதுரை (27), மானூர் அருகே உள்ள வடக்கு வாகைகுளத்தை சேர்ந்த மதன் (21), மாரியப்பன் (29), பாளையங்கோட்டை ஜோதிபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் மாரிமுத்து (38) ஆகிய 4 பேரும் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் சேர்மதுரை உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.