பெண்ணிடம் வழிப்பறி செய்த திருச்சி ரவுடி கைது

பெண்ணிடம் வழிப்பறி செய்த திருச்சி ரவுடி கைது

Update: 2021-12-11 19:33 GMT
திருச்சி, டிச.12-
முசிறி அருகே நீலியம்பட்டி கல்பாறையை சேர்ந்தவர் கமலா (வயது 45). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி, அவர் மஞ்சள் பையில் வைத்திருந்த ரூ.1000, கைக்கெடிகாரம், ஆதார் அட்டை ஆகியவற்றை பறித்துச்சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கமலாவிடம் வழிப்பறி செய்தது திருச்சி கே.சாத்தனூர் கலிங்கநகரை சேர்ந்த பிரபல ரவுடியான எல்லத்துரை (32) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். கைது செய்யப்பட்ட எல்லத்துரை மீது திருச்சி கே.கே.நகர் போலீஸ் நிலையத்திலும் வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்