சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஏழாயிரம் பண்ணை அருகே சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள எலுமிச்சங்காய் பட்டியில் சீனிவாச பெருமாள் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோல அச்சங்குளம் சீனிவாச பெருமாள் கோவில், எட்டக்காபட்டி பெருமாள் கோவில், ரெட்டியாபட்டி சீனிவாச பெருமாள் கோவில், கீழ தாயில்பட்டி நாராயண பெருமாள் கோவில், மேலதாயில்பட்டியில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், ஏழாயிரம் பண்ணை காட்டு பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.