வனவிலங்குகளால் பயிர்கள் சேதம்
விருதுநகர் அருகே வன விலங்குகளால் பயிர்கள் சேதமாகி உள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூரில் மக்காச்சோளம் மற்றும் குதிரைவாலி சாகுபடி செய்துள்ள நிலங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை இரவு நேரங்களில் காட்டுப்பன்றி மற்றும் மான் போன்ற வனவிலங்குகள் சேதப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பயிர் சாகுபடி செய்துள்ள முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பிரபாகரன் கூறுகையில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம். இந்நிலையில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தியதால் பெரும் வேதனைக்கு ஆளாகி உள்ளோம். பலமுறை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எனவே சேதமடைந்த பயிர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார். மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடித்தால் மாவட்ட நிர்வாகம் வனத்துறையினர் மூலம் வனவிலங்குகள், பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.