பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி புதுக்கோட்டையில் தொடங்கியது

கல்லூரி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2021-12-11 18:31 GMT
புதுக்கோட்டை:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே மாணவிகளுக்கான கால்பந்து போட்டி புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 9 அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியை கல்லூரி முதல்வர் திருச்செல்வம் மற்றும் கால்பந்து கழக செயலாளர் குமார் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் மாணவிகள் ஆக்ரோஷமாக விளையாடினர். தொடர்ந்து போட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜான் பார்த்திபன் மற்றும் பேராசிரியர்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்