பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை ஏற்பட்டால்-பெண்கள் துணிவுடன் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும்-கலெக்டர் அறிவுரை
பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை ஏற்பட்டால் பெண்கள் தைரியமாக உயர்அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை கூறினார்.
சிவகங்கை,
பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை ஏற்பட்டால் பெண்கள் தைரியமாக உயர்அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை கூறினார்.
கருத்தரங்கம்
பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் கொடுமைகளை தடுக்கும் வகையில் 2013-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு மற்றும் குறை தீர்வுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் பெண்கள் தங்கள் உரிமைகள், கடமைகள் ஆகியவற்றை நிலைநாட்ட முடியும். மேலும், அது தொடர்பான விவரங்களையும் இச்சட்டத்தின் வாயிலாக பெறமுடியும். நம் நாட்டில் விசாகா வழக்கில் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி, ராஜஸ்தானில் முதன்முதலாக விசாகா ஆணையம் பெண்களை பாதுகாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டது. அப்பொழுது தான் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து வெளிச்சத்திற்கு வந்தது கண்டறியப்பட்டது.
புகார் தெரிவிக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை அலுவலர் மணிமேகலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) மேரிதபிதாள், சமூக நல பாதுகாப்பு அலுவலர் சுதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
--------