சிவகங்கை துணை மின் நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே சிவகங்கை நகரில் உள்ள இந்திரா நகர், இளையான்குடி ரோடு, மானாமதுரை ரோடு, நேரு பஜார், நெல் மண்டி தெரு, பஸ் ஸ்டாண்ட், மீன் மார்க்கெட், போஸ் ரோடு, தொண்டி ரோடு, மற்றும் இதைச் சுற்றியுள்ள, பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.