ரூ.10 லட்சம் நகை திருட்டில் 2 பேர் கைது

காரைக்குடியில் ரூ.10 லட்சம் நகை திருட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-11 18:05 GMT
காரைக்குடி,

காரைக்குடி 100 அடி சாலையில் அடகு வைத்த நகைகளை மீட்கும் நிறுவனத்தில் லாக்கரில் இருந்த 27 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் மாயமாகி இருந்தது. அதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். அலுவலக கதவும் உடைக்கப்படாமலும், லாக்கரும் உடைக்கப்படாமல் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து நிறுவன மேலாளர் அன்னபூரணி கொடுத்த புகாரின் பேரில் ஏற்கனவே அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ேதவகோட்டை ரஸ்தாவை சேர்ந்த செல்வகுமார்(வயது 31), காட்டு தலைவாசலை சேர்ந்த மணிகண்டன்(24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள் மாற்று சாவி கொண்டு திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 174 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டது.


மேலும் செய்திகள்