4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஆற்காடு, திமிரி பகுதிகளை சேர்ந்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது ெசய்யப்பட்டனர்.

Update: 2021-12-11 17:56 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் திமிரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த ஆற்காடு பகுதிகளைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 25), ராஜேஷ் (36), சரண்குமார் (22) மற்றும் சட்ட விரோதமாக வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட திமிரிை அடுத்த கணியனூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 இவர்கள் 4 பேரையும் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் ஓராண்டு சிறை தண்டனைக்கான  உத்தரவின் நகல் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்