மரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

சோளிங்கர் அருகே மரத்தில் லாரி மோதி டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2021-12-11 17:56 GMT
சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பெருங்காஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 25). இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். 

இவர் நேற்று முன்தினம் இரவு அரக்கோணத்தில் இருந்து டி.வி.க்கான உதிரிபாகங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சோளிங்கரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

கரிக்கல் அருேக வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி சாலையோரம் இருந்த ஒரு புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சம்பவ இடத்திலேயே லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்கிருந்தவர்கள் விபத்து பற்றி சோளிங்கர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெறித்தனர். 

கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து 4 மணி நேரம் போராடி டிரைவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்