தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது

ஆரணி அருகே சொத்து பிரித்து தராததால் தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-11 17:55 GMT
ஆரணி

ஆரணி அருகே சொத்து பிரித்து தராததால் தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகனை போலீசார் கைது செய்தனர். 

 தாயிடம் தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்த அப்பாதுரை என்பவரின் மனைவி ஜெயாஅம்மாள் (வயது 70).

இவர்களுக்கு விஜயகுமார், பேபி, பூபாலன், செந்தாமரை, தங்கதுரை என 5 பிள்ளைகள் உள்ளனர். விஜயகுமாரை தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 

நீண்ட நாட்களாக விஜயகுமார் தாயிடம் எனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை, சொத்தை பிரித்து தரவில்லை என தகராறு செய்து வந்துள்ளார். 

 பெட்ரோல் ஊற்றி எரிப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயாம்மாள் தூங்கிக் கொண்டிருக்கும் போது விஜயகுமார் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது. 

இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை  கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சொத்து தகராறில் தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்