கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த ராணுவ வீரர்

மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த ராணுவ வீரர் தனது நண்பர்களுக்கும் விருந்தாக்க முயன்றதாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-12-11 17:33 GMT
குழித்துறை, 
மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த ராணுவ வீரர் தனது நண்பர்களுக்கும் விருந்தாக்க முயன்றதாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி
மார்த்தாண்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி ஓய்வு நேரத்தில் மாத சீட்டு நடத்தி வந்தார். அதில் அந்த மாணவிக்கு நஷ்டம் ஏற்பட்டு பண நெருக்கடி உண்டானதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து பண நெருக்கடியை சமாளிக்க அந்த மாணவி முயன்றார். அப்போது கல்லூரி நண்பரின் உறவினரான அருமனை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் சஜித் (வயது32)  என்பவர் அறிமுகமானார். அவர் மாணவிக்கு பணம் தந்து உதவுவதாக கூறினார்.
ஆபாச படம்
அதை நம்பிய மாணவி சஜித்துடன் பழக தொடங்கினார். அப்போது சஜித் செல்போனில் பேசும் போது பணம் குறித்து மட்டுமல்லாமல் பிற விஷயங்கள் குறித்தும் பேசி உள்ளார். அப்போது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, தான் சொல்வதை செய்யும் அளவுக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து சம்பவத்தன்று வீடியோ காலில் பேசும்போது, தான் கூறியபடி கல்லூரி மாணவியை நடந்து கொள்ள ெசய்து ஆபாச படம் எடுத்து வீடியோவில் பதிவு செய்து கொண்டதாக தெரிகிறது.
பலாத்காரம்
அதன்பிறகு அந்த சஜித் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லாவிட்டால் உனது ஆபாச வீடியோ படத்தை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மாணவியை மிரட்டினார். அதைத்தொடர்ந்து மாணவியை தனிமையில் அழைத்து சென்று  பலாத்காரம் செய்ததாகவும், அத்துடன் நிற்காமல் தனது நண்பர்கள் 3 பேருக்கும் ஆபாச வீடியோ படங்களை காண்பித்து, மாணவியை விருந்தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். அதன் பேரில் ராணுவ வீரர் சஜித், அவரது நண்பர்கள் ஜான் பிரிட்டோ (32), கிரீஸ் (33), பிபின் ஜான் (33) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்