வேன் மோதி பெண் பலி

வேன் மோதி பெண் பலி

Update: 2021-12-11 17:32 GMT
ராமேசுவரம்
சண்டிகர் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப்(வயது 35). இவர் மனைவி சீமாவுடன் ராமேசுவரம் கோவிலுக்கு வந்தார். கோவிலில் தரிசனம் செய்து விட்டு 2 பேரும் நேற்று பஸ் மூலம் தனுஷ்கோடி சென்றனர். அரிச்சல்முனை கடற்கரை பகுதியை சுற்றிப்பார்த்துவிட்டு அங்கிருந்து புயலால் அழிந்து போன கடற்கரை பகுதிக்கு வந்தனர். பின்னர் ராமேசுவரம் வருவதற்காக கம்பிபாடு சாலையில் பஸ்சுக்காக கணவன்-மனைவி காத்திருந்தனர். அப்போது அரிச்சல்முனையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த சுற்றுலா வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சீமா மீது  மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தனுஷ்கோடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உத்திரபாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராமேசுவரத்தை சேர்ந்த வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்