புகையிலை பதுக்கிய 2 பேர் சிக்கினர்
கழுகுமலையில் புகையிலை பதுக்கிய 2 பேர் சிக்கினர்
கழுகுமலை:
கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது கழுகுமலை முனியசாமி கோவில் தெருவில் வேனில் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் பாக்கு இறக்கிக் கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர். வேனை ஓட்டி வந்த டிரைவர் மதுரை முனிச்சாலை ரோட்டை சேர்ந்த நாராயணன் மகன் ஆனந்த குரு (வயது 30) என்பவரையும், கழுகுமலை முனியசாமி கோவில் தெரு ஜெயராஜ் மகன் சேர்மராஜ் (34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 224 கிலோ எடை கொண்ட 14 புகையிலை மூட்டைகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட 105 கிலோ பாக்கு மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.