லாட்ஜில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
லாட்ஜில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திருப்பூர்,
திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 9-ந் தேதி அறை எடுத்து தங்கியவர் நேற்று முன்தினம் மாலை வரை அறையை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் அவர் தூக்குப்போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். உடனடியாக இது பற்றி திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த தினேஷ் (வயது 32) என்பதும், பனியன் நிறுவன தொழிலாளியான இவர் அடிக்கடி லாட்ஜூக்கு வந்து அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது. கடந்த சில நாட்களாக கடன் பிரச்சினையில் தினேஷ் சிரமப்பட்டு வந்ததாகவும் அதனால் மனம் உடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.