ரூ1கோடியே 18 லட்சத்துக்கு வழக்குகள் தீர்வு

ரூ1கோடியே 18 லட்சத்துக்கு வழக்குகள் தீர்வு;

Update: 2021-12-11 15:30 GMT
தளி, 
உடுமலை நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவரும் சப்-கோர்ட்டு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமையில் ஒரு அமர்வும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி ஆர்.பாக்கியராஜ் தலைமையில் மற்றொரு அமர்வும் என பிரிவுகளாக நடைபெற்றது. 
இதில் மாவட்ட உரிமையியல், சார்பு மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 432 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தண்டனைக்குரிய சிறு வழக்குகள், காசோலை மோசடி, புரோநோட்டு, மோட்டார் வாகன விபத்து, சிவில் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் என 269 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது.அதன்படி ரூ.1 கோடியே 18 லட்சத்து 93 ஆயிரத்து 18 க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.இதில் வக்கீல்கள் மகேஸ்வரன், பாலதண்டபாணி மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுவினர் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்