நாகாத்தம்மன் கோவிலில் சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
நாகாத்தம்மன் கோவிலில் சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்
நல்லூர்,
திருப்பூர் விஜயாபுரம் அருகே உள்ள புற்றுக்கண் நாகாத்தம்மன் கோவிலில் சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அங்கு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகாத்தம்மன் கோவில்
திருப்பூர், காங்கேயம் ரோடு, விஜயாபுரம் வழியாக அமராவதி பாளையம் செல்லும் சாலையில் யாசின்பாபு நகர், காட்டுப்பாளையம் உள்ளது. இங்குள்ள மெயின் சாலையில் புற்றுக்கண் நாகாத்தம்மன் கோவில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்கோவில் விரிவுபடுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுவதாக கூறி கோவிலை விரிவுபடுத்துவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தெற்கு தாசில்தார் ராஜகுமார் தலைமையில் கடந்த நவம்பர் 19, 24-ம் தேதிகளில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
சிலைகள் உடைப்பு
இந்த நிலையில் இக்கோவில் அருகில் இருந்த கருப்பராயன் சிலை, மண் குதிரை சிலை, விநாயகர் சிலை ஆகிய சிலைகளை யாரோ மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும் கோவில் முன்பு நடப்பட்ட வேல் வளைக்கப்பட்டு சாய்ந்து கிடந்தது. நேற்று காலை இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி நாகராஜன் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் இந்து முன்னணி மாநகர மாவட்ட துணைத்தலைவர் பிடெக்ஸ்.பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், கோவில் சிலைகளை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் நல்லூர் போலீசில் இது குறித்து புகார் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் ராஜகுமார், தெற்கு சரக துணை போலீஸ் கமிஷனர் ரவி, நல்லூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
நல்லூர், டிச.12-

சமாதான பேச்சுவார்த்தை
மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் இந்து அமைப்பினர், போலீசார், அதிகாரிகள் குவிந்ததால் அங்குள்ள பள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய சமூகத்தினர் கூடினர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது.
இரு சமூகத்தினரிடமும் சமாதானமாக பேசி அங்கிருந்து அனைவரையும் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். பின்னர் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் கோவிலுக்கு அப்பகுதியில் மாற்று இடம் ஒதுக்கி வழிபாடு செய்ய ஏற்பாடு செய்வதாக தாசில்தார் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.