மழை காரணமாக ஆங்காங்கே ரோடுகள் சேதமடைந்துள்ளன

மழை காரணமாக ஆங்காங்கே ரோடுகள் சேதமடைந்துள்ளன

Update: 2021-12-11 15:20 GMT
திருப்பூர், 
திருப்பூரில் சமீப நாட்களாக பெய்த மழை காரணமாக ஆங்காங்கே ரோடுகள் சேதமடைந்துள்ளன. சில ரோடுகள் பல்லாங்குழி ரோடாக காட்சியளிக்கின்றன.
பல்லாங்குழி ரோடு
திருப்பூர் மாநகரில் உள்ள பெரும்பாலான ரோடுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே ரோடுகளில் குழி தோண்டப்பட்டு வாகன போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.  இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக பெரும்பாலான ரோடுகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகளின் சிரமம் மேலும் அதிகரித்துள்ளது.  ஊத்துக்குளி ரோடு முதல் ரெயில்வே கேட் மற்றும் இரண்டாவது ரெயில்வே கேட்டிற்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரோடு முற்றிலும் சேதமடைந்து, பல்லாங்குழி ரோடாக மாறியுள்ளது. இதேபோல் ஊத்துக்குளி ரோட்டில் இருந்து புது ராமகிருஷ்ணாபுரம் செல்லும் வழியில் டி.பி.ஏ. காலனி உள்ளது.
வாகன ஓட்டிகள் அவதி
இங்கு ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டியவாறு செல்லும் ரோடானது நீண்ட தூரத்திற்கு சேதமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மேற்கண்ட இரண்டு ரோடுகளிலும் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிச்செல்கின்றனர். ரோட்டில் உள்ள குழி காரணமாக இப்பகுதியில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. குண்டு, குழியில் தினசரி வாகனங்களை ஓட்டி செல்பவர்களின் வாகனங்கள் நாசம் அடைவதுடன் அவர்களின் உடலுக்கும் கேடு ஏற்பட்டு வருகிறது. ஊத்துக்குளி ரோட்டில் தினசரி வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் ரோட்டின் சேதம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. எனவே சேதமடைந்து காணப்படும் ரோடுகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.  

மேலும் செய்திகள்