விபத்தில் சிக்கிய கார் பள்ளத்தில் கவிழ்ந்தது
விபத்தில் சிக்கிய கார் பள்ளத்தில் கவிழ்ந்தது
ஊட்டி
ஊட்டியில் இருந்து நஞ்ச நாடு கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது பாலாடவில் இருந்து முள்ளி கொரை அருகே ஒரு கார் வந்தது. அப்போது அந்த காரும் மினிபஸ்சும் திடீரென்று மோதி யது. இதில் அந்த கார் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அந்த காரில் இருந்த 2 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்.
இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.