மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் வாலிபர் சாவு
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் வாலிபர் சாவு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி -வால்பாறை ரோடு வஞ்சியாபுரம் பிரிவு பொன் நகரை சேர்ந்தவர் போல்சன். இவரது மகன் நிவின் ஆண்டனி (வயது 26). கோட்டூர் ரோடு ரெயில்வே மேம்பால பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நிவின் ஆண்டனியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் ஏற்கனவே நிவின் ஆண்டனி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து டிரைவர் ராஜன் என்பவரை விசாரணை நடத்தி வருகின்றனர்.