குடும்பத்தகராறு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 29). இவர் அதே பகுதியில் கோழிக்கறி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகத்திற்கும் அவருடைய மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சண்முகம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
அப்போது சண்முகம் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.