திருமண ஏற்பாடு செய்ததால் விரக்தி விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தர்மபுரியில் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் விரக்தி அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-11 06:50 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் பெற்றோர், திருமண ஏற்பாடு செய்ததால் விரக்தி அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருமண ஏற்பாடு
தர்மபுரி குள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 25). இவர் தனது தந்தையின் பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தமிழ்ச்செல்வன் திருமணம் தற்போது வேண்டாம் என கூறியதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் பெற்றோர், திருமண ஏற்பாடு செய்து வந்ததால் விரக்தி அடைந்த தமிழ்ச்செல்வன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
பரிதாப சாவு
இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வாலிபர் தற்கொலைக்கான காரணம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் விரக்தி அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  தர்மபுரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்