கணக்கில் வராத பணம் சிக்கிய விவகாரம் சார்பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு

தர்மபுரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ 55 ஆயிரம் சிக்கியது தொடர்பாக சார்பதிவாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-12-11 06:50 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.55 ஆயிரம் சிக்கியது தொடர்பாக சார்பதிவாளர் உள்பட 4 பேர் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பணம் சிக்கியது
தர்மபுரி மாவட்ட பத்திர பதிவு அலுவலக வளாகத்தில் உள்ள தர்மபுரி மேற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அலுவலகத்தில் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத ரூ.55 ஆயிரத்து 400 சிக்கியது.அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர் இந்த பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
4 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த விசாரணையை தொடர்ந்து சார்பதிவாளர் லட்சுமிகாந்தன் (வயது 45), கணினி ஆபரேட்டர் ராதா (32), ஊழியர் குணசேகரன் (35), புரோக்கராக செயல்பட்ட அபிசுதின் (64) ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் தர்மபுரி பத்திர பதிவுத்துறை அலுவலக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
----

மேலும் செய்திகள்