யானை தந்தம் கடத்தியவருக்கு 3 ஆண்டு சிறை-மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு

யானை தந்தம் கடத்தியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2021-12-10 22:30 GMT
மேட்டூர்:
கொளத்தூர் அருகே உள்ள ஊஞ்சகோரை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவர் வன விலங்குகளை வேட்டையாடுவதில் கைதேர்ந்தவர். இவரது கூட்டாளிகள் இவரை குட்டி வீரப்பன் என்று அழைப்பார்கள். கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் தார்காடு பகுதியில் 6 யானை  தந்தங்களை சரவணன் மற்றும் கூட்டாளிகள் அழகேசன் (35), ஆறுசாமி (38) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்களை மறித்து, மேட்டூர் வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த யாைன தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு யானை தந்தங்களை கடத்திய சரவணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்