அ.தி.மு.க.வினருக்கு வாக்காளர் பட்டியல்

அ.தி.மு.க.வினருக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது.

Update: 2021-12-10 21:15 GMT
பாவூர்சத்திரம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, பாவூர்சத்திரத்தில் உள்ள தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் வாக்காளர் பட்டியல்களை கழக நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்களிடம் வழங்கினார். மேலும் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்