நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-12-10 20:02 GMT
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தென்புற கீழ்ப்பகுதியில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும் சில இடங்களில் குப்பைகள் நிறைந்து காட்சி அளிக்கின்றன. இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டீக்கடையின் அருகில் உள்ள முட்புதரில் நேற்று காலையில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது.
இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, அந்த பாம்பை பிடிப்பதற்காக தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் பாம்பு பிடிபடாமல், முட்செடிகளுக்கு இடையே சென்று மறைந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், ‘கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகுந்த பாம்பு மண்ணுளி வகையைச் சேர்ந்த உழவன் பாம்பு’ என்று தெரிவித்தனர். நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்