விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

பாளையங்கோட்டையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-10 19:57 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள சேவியர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 34). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் தங்கராஜ் பாளையங்கோட்டை மார்க்கெட் ஆட்டோ நிறுத்தம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்