சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-12-10 19:52 GMT
நெல்லை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில், நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையொட்டி மதியம் 12 மணி முதல் 12-10 மணி ஆட்டோ, மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலர் மோகன் தலைமை தாங்கினார். பொருளாளர் பெருமாள், ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலர் முருகன், அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு சங்க பொதுச்செயலாளர் ஜோதி, தலைவர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மேலும் செய்திகள்