வேன் மோதி வாலிபர் பலி

வேன் மோதி வாலிபர் பலியானார்

Update: 2021-12-10 19:25 GMT
திருமயம்
திருமயம் அருகே உள்ள செவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது 35). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வாழகுறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வாழகுறிச்சியில் இருந்து விராச்சிலை நோக்கி சென்ற தனியார் பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னுத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து வேன் டிரைவர் பிச்சமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்