2 மலைப்பாம்புகள் பிடிபட்டன

புதருக்குள் பதுங்கி இருந்த 2 மலைப்பாம்புகள் பிடிபட்டன

Update: 2021-12-10 19:19 GMT
பொன்னமராவதி
பொன்னமராவதி ஒன்றியம், தொட்டியம்பட்டி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கட்டையாண்டிபட்டி-தொட்டியம்பட்டி சாலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது புதருக்குள் சரசரவென சத்தம் கேட்டது. அந்த புதரை, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சாமிநாதன் விலக்கி பார்த்தபோது அங்கு சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பும், 8 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பும் பதுங்கி இருந்தன. இதுகுறித்து பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த 2 மலைப்பாம்புகளையும் லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்புகளை சாக்கு பையில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்