பெட்ரோல் விற்பனை நிலையம் முற்றுகை

சிப்காட்டில் பெட்ரோல் விற்பனை நிலையம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2021-12-10 19:10 GMT
மானாமதுரை,

மானாமதுரை சிப்காட் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நேற்று மாலை அங்கு பெட்ரோல் போட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனம் திடீரென்று நடுவழியில் நின்றதால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தங்கள் வாகனத்தின் பெட்ரோலை கேனில் நிரப்பி பார்த்த போது அதில் கலப்படம் இருப்பதாக கூறி பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உரிமையாளர் கூறும் போது, பெட்ரோல் எத்தனால் கலக்காமல் விற்றது தான் காரணம் என்று கூறினார். இதையடுத்து வாகன ஓட்டிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்