கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
போலீசார் சோதனை
அரியலூர் நகரில் பஸ் நிலையம், ராஜீவ் நகர், மின் நகர், ரெயிலடி, எத்திராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் போலீசாருடன் சென்று நகர் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரெயிலடியில் கஞ்சா விற்றதாக கருப்பையாவின் மனைவி ஈஸ்வரி(வயது 36), காளியம்மன் கோவில் தெருவில் கஞ்சா விற்றதாக பழனிவேல் மகன் ஸ்ரீதர்(23), எத்திராஜ் நகரில் கஞ்சா விற்றதாக முத்தையன் மகன் தமிழ்ச்செல்வன்(21) ஆகியோரை பிடித்து, அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர்.
3 பேர் கைது
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னா் ஈஸ்வரி திருச்சி மகளிர் சிறையிலும், ஸ்ரீதர், தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஜெயங்கொண்டம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.