கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-12-10 19:06 GMT
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜதுரை, மணவாளன் மற்றும் போலீசார் மீன்சுருட்டி பகுதியில் உள்ள கடைவீதிகளில் சோதனை செய்தனர். அப்போது இடைக்கட்டு கிராமத்தில் தோப்பு தெருவில் உள்ள ராஜேந்திரன்(வயது 58) மற்றும் குபேந்திரன்(50), ராதாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கலியபெருமாள்(58) ஆகிய 3 பேரும் தங்களது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்