விவசாயியை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

விவசாயியை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-10 18:54 GMT
குளித்தலை, 
குளித்தலை அருகே உள்ள கீழகுட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 64), விவசாயி. இவர் நேற்று குளித்தலை அருகே உள்ள சிவாயம் செல்வதற்காக அய்யர்மலை- சிவாயம் செல்லும் பிரிவு சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கணேசனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
இதனால் பீதியடைந்த கணேசன் சத்தம் போடவே அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் குளித்தலை அருகே உள்ள சொட்டல் பகுதியை சேர்ந்த கதிரேசன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கதிரேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்