திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, திருப்பத்தூர் சப்- கலெக்டர் பானு, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.