பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி

துலுக்கன்குறிச்சி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2021-12-10 18:12 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் குமார சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி தொடங்கி  நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்