40 பேருக்கு தொற்று; கொரோனாவுக்கு முதியவர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
நாமக்கல்:
40 பேருக்கு தொற்று
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 53,877 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே 3 பேரின் பெயர்கள் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,880 ஆனது.
இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,920 ஆக உயர்ந்தது. நேற்று 45 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
முதியவர் பலி
இதனிடையே திருப்பூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் பலியானார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 514 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் இதுவரை 52,952 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 454 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.