வேன் மோதி தனியார் நிறுவன பெண் ஊழியர் பலி

வேன் மோதி தனியார் நிறுவன பெண் ஊழியர் பலி

Update: 2021-12-10 17:53 GMT
நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் ஜாகீர்தண்டலம் கண்டிகை கிராமத்தை சேர்ந்த அசோகனின் மகள் அர்ச்சனா (வயது 32). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக தன்னுடன் வேலை பார்க்கும் சக தோழியான லட்சுமியும் அர்ச்சனாவும் திருமால்பூர்-பனப்பாக்கம் சாலையில் உள்ள ஜாகீர்தண்டலம் கண்டிகை பஸ் நிருத்தத்தில் மதியம் 12 மணியளவில் தாங்கள் வேலைபார்க்கும் தனியார் நிறுவன பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடி அர்ச்சனா, லட்சுமி மீது மோதியது. அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் அர்ச்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லட்சுமி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான அர்ச்சனாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நெமிலி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சரக்கு வேன் டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்