ஹெலிகாப்டர் பயிற்சி முடித்த 20 விமானிகளுக்கு கேடயம், சான்றிதழ்

அரக்கோணம் ஐ.என்.எஸ்.ராஜாளியில் ஹெலிகாப்டர் பயிற்சியை நிறைவு செய்த 20 விமானிகளுக்கு கேடயம், சான்றிதழை கடற்படை ரியர் அட்மிரல் பிலிபோஸ் ஜி.பைனுேமாட்டில் வழங்கினார்.

Update: 2021-12-10 17:53 GMT
அரக்கோணம்

அரக்கோணம் ஐ.என்.எஸ்.ராஜாளியில் ஹெலிகாப்டர் பயிற்சியை நிறைவு செய்த 20 விமானிகளுக்கு கேடயம், சான்றிதழை கடற்படை ரியர் அட்மிரல் பிலிபோஸ் ஜி.பைனுேமாட்டில் வழங்கினார்.

ஹெலிகாப்டர் பயிற்சி

அரக்கோணம் கடற்படை விமான நிலையமான ஐ.என்.எஸ். ராஜாளியில் உள்ள ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியில் கடந்த 22 வாரங்கள் அதிகாரிகள் 20 பேர் பயிற்சி விமானிகளாக கடுமையான பறக்கும் மற்றும் தரைப்பயிற்சியை மேற்கொண்டனர். 
அப்போது பயிற்சிவிமானிகளுக்கு ஹெலிகாப்டர் பறக்கும் பல நுணுக்கங்களும், வழி செலுத்தல், இரவு நேரத்தில் பறத்தல் மற்றும் கடலுக்கு மேல் இயக்குதல் ஆகியவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

முடிவில் பறப்பதில் சிறந்தவர், தரைப்பாடங்களில் சிறந்தவர் மற்றும் ஒட்டுமொத்த மெரிட்டில் சிறந்தவர் எனப் பயிற்சியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேற்று அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. 

அதில் கோவா ஏரியா கமாண்டிங் மற்றும் பிளாக் ஆபீசர் நேவல் ஏவியேஷன் ரியர் அட்மிரல் பிலிபோஸ் ஜி.பைனுமோட்டில் பங்கேற்று கடற்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் பயிற்சி நிறைவு செய்த அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

பரிசு, சான்றிதழ்

அதைத்தொடர்ந்து பிளாக் ஆபீசர் கமாண்டிங் இன் சீப் கிழக்கு கடற்படை கமாண்ட் ரோலிங் டிராபி தகுதி வரிசையில் முதலிடம் பிடித்த லெப்டினன்ட் வருண்சிங்குக்கு வழங்கப்பட்டது. சப்-லெப்டினன்ட் குண்டே நினைவு புத்தகப் பரிசு லெப்டினன்ட் அமித் சங்வானுக்கு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த தகுதி வரிசையில் முதலிடம் பிடித்ததற்காக கேரள கவர்னர் ரோலிங் டிராபி லெப்டினன்ட் அமித் சங்வானுக்கு வழங்கப்பட்டது. கூடுதலாக லெப்டினன்ட் அமித் சங்வான், ஒட்டுமொத்த தகுதி வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்ததற்காக வெண்கலப் பதக்கமும், சப்-லெப்டினன்ட் அப்லோட் கட்டத்தில் ஒட்டுமொத்த தகுதியின் வரிசையில் அதிக மதிப்பெண்களை பெற்றதற்காக வாளும் வழங்கப்பட்டது. 

புதிதாக தகுதி பெற்ற விமானிகள் இந்திய கடற்படையின் பல்வேறு இடங்களில் செயல்பாட்டு பிரிவுகளுக்கு நியமிக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் உளவு, கண்காணிப்பு மற்றும் திருட்டு, எதிர்ப்பு ரோந்து போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள். இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் நட்பு நாடுகளின் 759 விமானிகளுக்கு இதுவரை பயிற்சி அளித்துள்ளது. இந்த அணி தனது பொன்விழாவை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி கொண்டாடியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்