பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து வாகனங்களை நிறுத்தும் போராட்டம்

தொழிற்சங்கங்கள் சார்பில் வாகனங்களை நிறுத்தும் போராட்டம்

Update: 2021-12-10 17:52 GMT
குடியாத்தம்

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் ஒரே சமயத்தில் 10 நிமிடம் வாகன நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யு.சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது,

அதன்படி குடியாத்தத்தில் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் நகராட்சி அலுவலகம் எதிரே இந்த போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் காத்தவராயன், ஆட்டோ சங்க மாவட்ட துணைத் தலைவர் சாமிநாதன், மரம் ஏறும் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், பீடி சங்க தலைவர் மகாதேவன், கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் உள்பட ஏராளமானோர் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்