மனைவியை துன்புறுத்திய கணவர் கைது

மனைவியை துன்புறுத்திய கணவர் கைது

Update: 2021-12-10 17:29 GMT
ஊத்துக்குளி,
ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுபாளையம் ஊராட்சி மணியோசை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 57). இவரது மனைவி அன்புக்கரசி (46), இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அன்புக்கரசி நேற்று ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தினமும் அடித்து துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்