‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் அபாய பள்ளங்கள்
போடியில் இருந்து மதுரை செல்லும் சாலை சேதம் அடைந்து பல இடங்களில் பள்ளம் உருவாகி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இந்த அபாய பள்ளங்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பிரவீன்பாபு, போடி.
புதர்மண்டி கிடக்கும் பூங்கா
திண்டுக்கல் தேவசகாயநகரில் மாநகராட்சி பூங்கா கட்டப்பட்டு பூட்டியே கிடக்கிறது. கடந்த மாதம் பெய்த மழையால் பூங்கா முழுவதும் செடிகள், கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் நடமாடுவதால், அவை குடியிருப்புக்குள் புகுந்து விடுமோ? என்று மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே பூங்காவை சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும்.
-கோவிந்தராஜ், திண்டுக்கல்.
சாலையோர ஆக்கிரமிப்புகள்
கொடைக்கானல் தாலுகா தாண்டிக்குடியில் சாலையில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
-கணேஷ்பாபு, தாண்டிக்குடி.
துர்நாற்றம் வீசும் சாலை
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதோடு சில இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-யாசர்அராபத், திண்டுக்கல்.