கொடைக்கானலில் குளிர் சீசன் தொடக்கம்

கொடைக்கானலில் குளிர் சீசன் தொடங்கியுள்ளது.

Update: 2021-12-10 16:25 GMT
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் குளிர்கால சீசன் தொடங்கி, பிப்ரவரி மாதம் வரை நீடிப்பது வழக்கம். இதில் ஜனவரி 2-வது வாரத்தில் உறைபனி ஏற்படும். அதன்படி இந்த ஆண்டு குளிர்கால சீசன் தொடங்கியது. 
இந்த ஆண்டு தொடர் மழை பெய்ததின் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து குளிர் அதிகம் காணப்பட்டது. நேற்று அதிகாலையில் நட்சத்திர ஏரி பகுதியில் பனிமூட்டமாக இருந்தது. அங்கு சுமார் குறைந்தபட்ச 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. மாலை நேரத்தில் குளிர் அதிகரித்து காணப்படுவதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 
இருப்பினும் இந்த சீசனை அனுபவிப்பதற்காக வடமாநில புதுமண தம்பதிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் வருகை அதிகரித்துள்ளது. குளிர் சீசன் தொடங்கியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். 

மேலும் செய்திகள்