பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணிகள் தாமதத்துக்கு காரணம் என்ன

பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணிகள் தாமதத்துக்கு காரணம் என்ன

Update: 2021-12-10 15:46 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணிகள் தாமதத்துக்கு காரணம் என்ன நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

சாலை விரிவாக்கம்

பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து 3,254 சதுர மீட்டரும், அரசு நிலம் 6,836 சதுர மீட்டரும் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.33 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. 

இதுதவிர சாலை பணிக்கு ரூ.34 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. தற் போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மின் கம்பங்கள், மின் மாற்றிகள்

பொள்ளாச்சி நகரில் சிக்னல் இல்லாமல் வாகனங்கள் எளிதில் செல்ல காந்தி சிலை, சப்-கலெக்டர் அலுவலகம், தேர்நிலை திடல், நகராட்சி அலுவலகம், தபால் நிலையம், கந்தசாமி பூங்கா சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப் படுகிறது. நகரில் சாலை விரிவாக்க பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.

இதற்கிடையில் கோர்ட்டு கட்டிட பகுதிகளில் ஒரு மின் மாற்றி, 4 மின் கம்பங்களும், பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் ஒரு மின் மாற்றி, 6 மின் கம்பங்களும், பாரத எஸ்டேட் வங்கியில் இருந்து கோவை ரோட்டில் 4 மின் கம்பங்களும் மாற்றி அமைக்காமல் உள்ளது. இதனால் சாலை விரிவாக்க பணிகள் தாமதமாகி வருகிறது. மின் கம்பங்களை மாற்றி அமைத்தால் தான் பணிகளை விரைந்து முடிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்