சி.ஐ.டி.யூ. சார்பில் 10 நிமிட வாகன நிறுத்தும் போராட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் 10 நிமிட வாகன நிறுத்தும் போராட்டம் திருவாரூரில் நடந்தது.

Update: 2021-12-10 15:39 GMT
திருவாரூர்:
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் 10 நிமிட  வாகன நிறுத்தும் போராட்டம் திருவாரூரில் நடந்தது.
10 நிமிட வாகன நிறுத்தும் போராட்டம்
மத்திய அரசின் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் அகில இந்திய அளவில் 10 நிமிட வாகன நிறுத்தும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டம் குறித்து பொதுமக்கள் ெ்தரிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசுங்கள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று திருவாரூர் ரெயில்வே மேம்பாலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10 நிமிட வாகன நிறுத்தம் போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் 12 மணி முதல் 12.10 மணி வரை  நடந்தது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார்.
கோஷங்கள் 
இதில் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் தர்மலிங்கம், சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் மோகன், பழனிவேல், ராஜேந்திரன், கஜேந்திரன், கருணாநிதி, தவமணி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்