பெரியபாளையம் அருகே மின்சாரம் தாக்கி செங்கல் சூளை தொழிலாளிகள் 2 பேர் சாவு

பெரியபாளையம் அருகே மின்சாரம் தாக்கி செங்கல் சூளை தொழிலாளிகள் 2 பேர் பரிதாபமாக இறநதனர்.;

Update: 2021-12-10 14:49 GMT
இரும்பு குழாயில் மின்சாரம்

பெரியபாளையத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் தனியார் செங்கல் சூளை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரமணா (வயது 21), பிரசாந்த் (21) ஆகியோர் குடும்பத்தினருடன் தங்கியிருந்து பணியாற்றி வந்தனர். நேற்று அதிகாலையில் இந்த பகுதியில் மழை பெய்தது. இதனால் வேலை செய்து கொண்டிருந்த அவர்கள் இருவரும் செங்கற்கள் இருப்பு வைக்கும் அறையில் மழைக்காக ஒதுங்கினர். அப்போது அங்கு இருந்த இரும்பு குழாய் மீது சாய்ந்து நின்றனர். மின் கசிவு காரணமாக அந்த அறையில் இருந்த இரும்பு குழாயில் மின்சாரம் பாய்ந்து இருந்தது.

சாவு

இதனால் அவர்கள் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பலியான ரமணா, பிரசாந்த் இருவரது உடலையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்