தூத்துக்குடியில் கஞ்சா விற்ற தொழிலாளி கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்;

Update: 2021-12-10 13:54 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோமஸ்புரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). கூலித் தொழிலாளி. இவர் கோமஸ்புரம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரிமுத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்