வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆவடியை அடுத்த திருநின்றவூர் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடியை அடுத்த திருநின்றவூர் பெரியார் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 24) பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு படுக்கைக்கு சென்றார். பின்னர் நேற்று காலை படுக்கை அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது செந்தில்குமார் படுக்கையறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.